காதலிப்பதாக கூறி இளம் பெண்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட ஜிம் மாஸ்டர் : காவல்துறை கைது.

சென்னை ராயபுரம் பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம்பெண் ஒருவர் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சிக்காக சேர்ந்தார்.

இந்நிலையில் உடற்பயிற்சி மையத்தில் நாகராஜ்(33) இந்த உடற்பயிற்சியாளருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

இந்நிலையில் நாகராஜ் இளம் பெண்ணிடம் இருந்து 45 சவரன் தங்க நகைகள் ரூபாய்10 லட்சம் பணம் மற்றும் விலை உயர்ந்த வந்த இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். இதற்கிடையில் நாகராஜின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெண் அவரை பின்தொடர்ந்து கண்காணித்ததில் நாகராஜ் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இது குறித்து நாகராஜிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் அந்த இளம் பெண்ணை சரமாரியாக வெளுத்து வாங்கினார். இது குறித்து இளம்பெண் நாகராஜ் மீது ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோல பெண்களை காதல் வலையில் விழவைத்து பணம் பறித்த ஜிம் மாஸ்டர் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response