“சரவணன் மீனாட்சி” செந்தில் நடிக்கும் பப்பாளி!

DSC_0404

வெற்றி பெற்ற மனம் கொத்திப் பறவை  படத் தயாரிப்பாளர்கள் S.அம்பேத்குமார், A.ரஞ்ஜீவ் மேனன் இருவரும் இணைந்து அரசூர் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படத்திற்கு ‘’பப்பாளி’’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் செந்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி தொடரின் நாயகன். சமீபத்தில் கூட கண்பேசும் வார்த்தைகள் படத்தில் இனியவுடன் நடித்திருந்தார்.

கதாநாயகியாக இஷாரா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சரண்யா நடிக்கிறார். இளவரசு, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கௌரவ வேடத்தில் நிரோஷா நடிக்கிறார் .

ஒளிப்பதிவு  :  விஜய்.   இசை  ;  விஜய் எபிநேசர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் A.கோவிந்த மூர்த்தி. இவர் வெற்றி பெற்ற கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் போன்ற நகைச்சுவை படங்களை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “75% காமெடியும், 25% செண்டிமென்ட்டும்  கலந்து பப்பாளியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தும் ஒருவனின் இனொரு பக்கத்தை காட்டும் படம் இது. தினமும் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம் போட்டு வாழும் அவனது வாழ்க்கைத்தரம் உயருகிறது. இவனுக்கு ஆயிரம் பேர் வணக்கம் போடும் அளவுக்கு உயர்ந்து IAS ஆகிறான்.

எந்த புள்ளியிலிருந்து  நம் வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியமல்ல, ஆனால் முக்கிய புள்ளியாக ஆவதுதான் முக்கியம். கையேந்தி பவன் நடத்தும் ஒருவன் IAS ஆவது என்பது எவ்வளவு கஷ்டமானது. முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை என்கிற ஒரு வரி எவ்விதம் நிஜமாகிறது என்கிற பாசிடிவ் கருத்துதான் பப்பாளி. 100 சதவீதம் நல்ல பழமாக பப்பாளி எவ்வாறு மதிக்கப்படுகிறதோ அது மாதிரி படமும், 100 சதவீதம் நல்ல படமாக போற்றப்படும், பாராட்டப்படும் என்கிறார் இயக்குனர் A.கோவிந்த மூர்த்தி.