கிராமப்புற பெண்களுக்கான மத்திய அரசின் நிதி உதவி திட்டம் : எத்தனை பேருக்கு தெரியும்?

மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் நகர்ப்புறங்களை விட கிராமப்புற பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து நிதி உதவி வழங்கி வருகிறது.

அந்த வகையில் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதி கிடைக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து தற்போது பார்ப்போம். அதாவது பணியாளர் திட்டம் என்ற திட்டத்தை மத்திய அரசின் மகளிர் மேம்பாட்டு கழகம் செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்தின் மூலம் ஏழை பெண் வியாபாரிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிதி உதவியானது நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு வழங்குவதில் மத்திய அரசு முன்னுரிமை வழங்கும் நிலையில் இந்த திட்டம் வணிகம் மற்றும் பொதுத்துறை வங்கிகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பெண்கள் தொழில் தொடங்குவதற்கு வட்டி இல்லா கடன் பெற்றுக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒருவருக்கு ரூ.3 லட்சம் வரை கடன் கிடைக்கும். இந்த பணத்தைப் பெற எந்தவிதமான பிணையும் தேவை கிடையாது. அதோடு இந்த கடனை வழங்குவதற்கு வங்கிகள் கட்டணம் எதுவும் வசூலிக்காது. இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சம் அல்லது அதற்கு கீழ் இருக்க வேண்டும்.

அதன்பிறகு ஒற்றைப் பெண்கள் மற்றும் ஊனமுற்ற பெண்களுக்கு வருமான வரம்பு கிடையாது. அதோடு எஸ்சி மற்றும் எஸ்.டி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் நிதி உதவி பெற்று எந்த ஒரு வியாபாரத்தையும் தொடங்கலாம். அதேசமயம் வங்கியில் வாங்கிய கடனை உரிய நேரத்தில் செலுத்துவது முக்கியம். இந்த நிதி உதவியை பெறுவதற்கு ஆதார், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ரேஷன் கார்டு, பிபிஎல் கார்டு, வங்கி பாஸ்புக் நகல் போன்றவைகள் தேவையானது. மேலும் இந்த ஆவணங்கள் மூலம் தகுதியுள்ள பெண்கள் கடன் பற்றிய பயன்பெறலாம்.

Leave a Response