காமெடி நடிகர் சதீஷ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கலந்துகொண்ட பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி விழா

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் ஒவ்வொரு வருடமும் தீபாவளி திருநாளை முன்னிட்டு சங்கம் சார்பாக உறுப்பினர்களுக்கு பரிசுப் வழங்கி வருவது வழக்கம். இவ்வருடமும் இந்நிகழ்வு 22 அக்டோபர் 2022 அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பழம்பெறும் பாடகி பத்மபூஷன் திருமதி பி.சுசீலா, தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு, மற்றும் இயக்குனர் ஜெயம் ராஜா, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சதீஷ், நாட்டுப்புற பாடகர் வேல்முருகன், காமெடி நடிகர் ‘போண்டா’ மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவை நடிகர் டேனி தொகுத்து வழங்கினார். விழாவின் முக்கிய அம்சமாக பாடகர் திரு வேல்முருகன் அவரது குழுவினரோடு இணைந்து பத்திரிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல பாடல்களை பாடி விழாவை இனிதே துவக்கி வைத்தார்.

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி மீண்டு வந்துள்ள நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு சங்கத்தின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது.

Leave a Response