போத்தனூர் தபால் நிலையம் – திரை விமர்சனம்

புதிய ஒரு முயற்சியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘போத்தனூர் தபால் நிலையம்’. இப்படம் ‘Aha’ ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.

சொந்த தொழில் தொடங்குவதற்காக வங்கியில் கடன் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார் நாயகன் பிரவீன். தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக ஹீரோவின் தந்தை, அந்த சூழலில் மிகப்பெரிய பிரச்சனையிலும் சிக்கிக்கொள்கிறார். அவரை காப்பாற்றுவதற்காக 36 மணி நேரத்துக்குள் தொலைந்த பணத்தை கண்டுபிடிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் மாட்டிக் கொள்ளும் ஹீரோ அந்த பணத்தை கண்டுபிடித்தாரா, இல்லையா என்பதே படத்தின் கதை.

எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
தொண்ணூறுகளின் உடைகள், பொருட்கள், தலைமுடியலங்காரம் ஆகிய எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலிராவ், நண்பராக வரும் வெங்கட்சுந்தர், அப்பா ஜெகன்கிரிஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

தபால் நிலையத்தில் நடக்கும் தினசரி வேலைகள் மற்றும் தபால் நிலையம் இயங்கும் முறைகள் பற்றி விரிவாக சொல்வது மற்றும் கதையை பீரியட் முறையில் சொல்லியிருப்பது எல்லாம் படத்திற்கு பலம் சேர்த்தாலும், முதல் பாதி படத்தில் தூக்கம் வராதவர்களையும் தூங்க வைக்கும் அளவுக்கு ரொம்பவே மெதுவாக நகர்வது படத்தின் மிகப்பெரிய குறை.

இந்த குறைகளை இரண்டாம் பாதியில் சற்று நிவர்த்தி செய்யும் இயக்குநர் பிரவீன் காட்சிகளை வேகமாக நகர்த்தி தூங்கியவர்களை தட்டி எழுப்பி சீட் நுணியில் உட்கார வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர், பீரியட் படத்திற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட ஒரு கலர் டோனை படம் முழுவதும் பயன்படுத்தியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. தென்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை.

Leave a Response