ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும், குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி வெற்றிநடை போட்டது.

அரண்மனை முதல் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சுந்தர் சி இயக்கத்தில்
அரண்மனை 3 உருவாகியிருக்கிறது.

‘அவ்னி சினிமேக்ஸ்’ நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க ஆர்யா, ராசி கண்ணா மற்றும் சுந்தர்.சி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முதல் இரண்டு பாகங்களை விட மிகப்பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இப்படத்தில் விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா, மனோபாலா, சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசை C.சத்யா. இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான ‘ரசவாச்சியே’ பாடல் திங்களன்று வெளியானது.

சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார். மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் .

தொழில்நுட்ப கலைஞர்கள்:
இயக்கம் : சுந்தர் .சி
தயாரிப்பு நிறுவனம் : அவ்னி சினிமேக்ஸ்
தயாரிப்பாளர் : குஷ்பு சுந்தர்
ஒளிப்பதிவு : UK செந்தில்குமார்
இசை : C சத்யா
கலை இயக்கம் : குருராஜ்
சண்டை பயிற்சி : பீட்டர் ஹெய்ன்,தளபதி தினேஷ் ,பிரதீப் தினேஷ்
நடனம்:பிருந்தா,தினேஷ்

Leave a Response