தலைவி திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அரவிந்த் சாமி

தமிழகத்தின் தங்கத்தாரகை, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு “தலைவி” படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விஜய். இப்படத்தில் கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த் சாமி
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

“தலைவி” திரைப்படம் 2021 செப்டம்பர் 10 முதல், தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு K.V.விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார். Vibri Motion pictures, சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரித்துள்ளார்,

நாசர், சமுத்திரக்கனி, மதுபாலா, நடிகை பாக்கியஸ்ரீ, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர். மதன் கார்கி வசனம் எழுத, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படவெளியீட்டை ஒட்டி படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட

நடிகர் அரவிந்த் சாமி பேசியதாவது,

“இந்தப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கும் என் மீது நம்பைக்கை வைத்த இயக்குநருக்கும் நன்றி. இரண்டு நாட்களுக்கு முன் தான் படம் பார்த்தேன். ஒரு மாஸ்டர் க்ளாஸ் மாதிரி தான் இருந்தது. கங்கனா, நாசர் மதுபாலா, சமுத்திரகனி இவர்களுடன் நான் ஏதோ செய்திருக்கிறேன் என்று தான் தோன்றியது. ஏனெனில் அனைவரது நடிப்பும் மிக அற்புதமாக இருந்தது. இயக்குநர் விஜயுடைய டீடெயிலிங், திரையில் காட்சிகளில் அவரது நுணுக்கம், பிரமிப்பாக இருந்தது.

இப்படம் தியேட்டரில் வரவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் காத்திருந்தார்கள். இத்திரைப்படம் ஒரு அற்புதம். இந்தியாவெங்கும் இப்படத்தை ரசிப்பார்கள். இப்படத்தில் அனைவருமே சிறப்பான பணியை தந்துள்ளார்கள். ஆனால் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது ஜீவியின் இசை தான். அந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறும், காட்சிக்கு ஏற்றவாறும் மிக பொருத்தமான, பிரமிப்பான இசையை வழங்கியுள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

“தலைவி” படம் செப்டம்பர் 10 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Response