சிறு குழந்தை போல் நானும் படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் -கங்கனா ரனாவத்

புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “தலைவி”. இப்படத்தை இயக்குநர் விஜய் இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி, கங்கனா ரனாவத், நாசர், சமுத்திரக்கனி, தம்பி ராமையா, மதுபாலா போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். Vibri Motion pictures, சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரித்துள்ளார். ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அனைத்திந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு தமிழ், தெலுங்கு, இந்தி என பன்மொழிகளில் 2021 செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படவெளியீட்டையொட்டி படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.
இந்நிகழ்வில்

நடிகை கங்கனா ரனாவத் பேசியதாவது,

“இப்படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த இரண்டு வருடங்களில் பலரும் பல ஏற்ற இறக்கங்களை கடந்து வந்துள்ளோம். இப்படத்தை பல தடைகளை கடந்து திரையரங்கிற்கு கொண்டு வந்துள்ளோம். அர்விந்த்சாமி, மதுபாலா மேடம் போன்ற மிகப்பெரிய நடிகர்களுடன் நடித்தது பெருமை. மதுபாலா மேடம் என்மீது மிகுந்த அக்கறை காட்டினார்கள்.

அர்விந்த்சாமி மூலம் ஜெயலலிதா மேடம் பற்றி நிறைய கதைகளை கேட்டறிந்தேன். சமுத்திரகனி சார், தம்பி ராமையா சார் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளார்கள். இன்னும் நான் படம் பார்க்கவில்லை. ஒரு சிறு குழந்தை போல் நானும் படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். தயாரிப்பாளர்கள் எந்த நிலையிலும் எந்தவித சமரசமும் இல்லாமல் இப்படத்தை தயாரித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இப்படத்தை தன் இசையால் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். இந்த வாய்ப்பை தந்த விஜய்க்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.

ரசிகர்களின் கண்களுக்கு விருந்து கொடுக்க ஜெயலலிதாவும், எம். ஜி. ஆரும். செப்டம்பர் 10 முதல் திரையில் தோன்றுவார்கள்.

Leave a Response