ஊரடங்கு கடுமையாக்கப்படுமா.. அமைச்சரவை கூட்ட ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு..

கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்பது குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று தெரிகிறது.

தமிழகம் முழுவதும் மார்ச் முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இப்போது 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில்  கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

தேசிய அளவில் அதிகம் கொரோனா பாதிப்புகள் கொண்ட மாநிலம் என்ற பட்டியலில் தமிழகம் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

ஆனால் அது உண்மையில்லை என்று தமிழக அரசு கூறி உள்ளது. இந் நிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் இறுதி முடிவை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

Leave a Response