தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் (ஜூன் 15- ஆம் தேதி) காலை 11.00 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசிக்க உள்ளார். இதில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது பற்றியும், ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் கூறுகின்றன. மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து அவ்வப்போது ஊரடங்கு பற்றி முடிவெடுப்பதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறியிருந்தது.
இதனிடையே ஜூன் 17- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடக்க உள்ள நிலையில் முதல்வர் மருத்துவக் குழுவின் கருத்துகளைக் கேட்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.