தமிழகத்தின் உறவுமுறைகளை கூறும் இயக்குநரின் அடுத்த படைப்பு தேரும் போரும்

“மதயானைக்கூட்டம்” என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் “தேரும் போரும்”

இதில் கதாநாயகனாக “அட்டக்கத்தியில்” அறிமுகமாகி “குக்கூ”,”விசாரணை”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” போன்ற படங்களில் நடித்த தினேஷ் தனது முழுமையான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

“மைனா”,”கும்கி”, “பைரவா”,”ஸ்கெட்ச்” படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்குனராவும், லாரன்ஸ் கிஷோர் எடிட்டராகவும் பணியாற்றுகிறனர்.

இந்த படத்திற்காக ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடலாசிரியர் ஏகாதசி எழுதி அனைத்து பாடல்களும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

மிகுந்த பொருட்செலவில் முன்னனி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பங்குபெரும் “தேரும் போரும்” படத்திற்கு இப்போதே சினிமா வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் முதல்வாரத்தில் சிவகங்கை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் துவங்க இருக்கிறது. “தேரும் போரும்” திரைப்படத்தை வில்அம்பு, கென்னடி கிளப் படங்களை தயாரித்த தாய் சரவணனின் ‘நல்லுசாமி பிக்ஸர்’ஸ்’ சார்பாக நடிகர் அருள்தாஸ் மற்றும் கார்த்திக்துரை இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்குகின்றனர்.

Leave a Response