வீழ்ந்திருந்த என்னை தூக்கி நிறுத்தியது “மான்ஸ்டர்” – எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி..!

மே 17 அன்று வெளியான மான்ஸ்டர் படம் இரண்டு வாரங்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது.

எஸ்.ஜே.சூர்யா பேசும்போது,

முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காகப் பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதை தான் நாயகன்.அனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.பாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநரின் வெற்றி.

குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குநர்.இப்படம் மூலம் என்னை உயரத்திற்கு கொண்டு வந்ததற்கு நெல்சனுக்கும், பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கும் நன்றி. இசையும் நன்றாக உதவி புரிந்திருக்கிறது. இதே குழுவுடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன் என்றார்.

 

Leave a Response