ஷங்கர் வெளியிட்ட ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ – ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

இயக்குனர் சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சித்தார்த் இணைந்து நடித்துள்ள ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பிச்சைககாரன் படத்துக்கு பின் சசி இயக்கியுள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இப்படத்தில் அக்கா, தம்பி கதையை வித்தியாசமான கோணத்தில் சசி அணுகியுள்ளாராம். இப்படத்தில் பைக் ரேஸ் சாம்பியனாக ஜி.வி.பிரகாஷும், டிராபிக் போலீஸாக சித்தார்த்தும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் இன்று வெளியிட்டார்.

ஷங்கரின் பாய்ஸ் படத்தில்தான் சித்தார்த் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response