அதிமுக -பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம்..!

தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக -பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மக்களவை தேர்தலையொட்டி, அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இன்று தமிழகத்தில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமானநிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இன்று காலை 11 மணியளவில் தேனியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பிரதமர் மோடி, அதனை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் ராமநாதபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

Leave a Response