உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இதற்கு முன்னர் வெளியான அவெஞ்சர் 3 பாகங்களும் வசூலில் சக்கைப்போடு போட்டன. இதையடுத்து அவெஞ்சர்ஸ் படத்தின் 4-ம் பாகமாக ஏப்ரல் 26-ம் தேதி வெளியாக உள்ள படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.
அயர்ன்மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்-மேன் என பல சூப்பர் ஹீரோக்கள் ஒன்று சேர்ந்துள்ள படம் தான் அவெஞ்சர்ஸ். இந்த நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் அயர்ன் மேன் கேரக்டருக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதேபோல் பிளாக் விடோ கதாப்பாத்திரத்திற்கு நடிகை ஆண்டிரியா டப்பிங் பேசியுள்ளார்.
ஆந்தம் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். அவெஞ்சர்ஸ் படத்தில் அயர்ன்மேனுக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் விஜய் சேதுபதி. பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா டப்பிங் பேசியுள்ளார்.
ஆந்தம் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது :
என் மகனுக்கு அயர்ன்மேன் கதாபாத்திரம் தான் பிடிக்கும். அவெஞ்சர்ஸ் படத்திற்கு டப்பிங் பேசுவதற்கு ஒப்புக் கொள்வதற்கு முன்பு பயந்தேன். என் டைமிங் வேறு, இன்னொரு நடிகரின் டைமிங்கை புரிந்து கொண்டு பேசுவது எப்படி என்று தெரியவில்லை. அது ரொம்ப கஷ்டம். எனக்கே நான் டப்பிங் பேசுவது கஷ்டமாக இருக்கும்.
பயப்படுவதா, கற்றுக் கொள்வதா என்று வருகையில் கற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். உலகம் முழுவதும் பிரபலமான ஒரு கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளேன். நான் பயத்துடன், மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தின் ரசிகர்கள் என்னை எப்படி பார்க்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.
படத்தில் சிறப்பு, நல்லா செய் என்பது போன்ற வார்த்தைகளை நான் சேர்த்துள்ளேன். இயல்பாக இருக்க வேண்டும் என்று நினைத்து பேசியுள்ளேன் என்றார்.