ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “சத்ரு“.
இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடித்துள்ளார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை மகேஷ் முத்துசாமி செய்ய, பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பினை செய்துள்ளார்.
இப்படத்தில் பாடல்களை கபிலன், மதன்கார்க்கி மற்றும் சொற்கோ எழுத அம்ரிஷ் இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையினை சூரிய பிரசாத் அமைத்துள்ளார். படத்திற்கான கலை பணியை ராஜா மோகன் அமைத்துள்ளார், சண்டை காட்சிகளை ஸ்டாண்ட் மாஸ்டர் விக்கி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் நவீன் நஞ்சுண்டன்.
இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இப்படத்தின் இயக்குனர் நஞ்சுண்டன் அவர்களுடன் படத்தினை பற்றி கேட்டோம்.
படத்தினை பற்றி இயக்குனர் நஞ்சுண்டன் கூறியதாவது, “இந்த படத்தில் கதிர் கேரக்டர் தான் போலீஸ், ஆனால் இது போலீஸ் கதை கிடையாது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த ஒரு பரபரப்பான சம்பவங்கள் தான் படம்.
தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டுவரும் முகமே தெரியாத ஐந்து குற்றவாளிகளை கதிர் 24 மணி நேரத்தில் எப்படி தேடி பிடித்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஆடியன்ஸ் ரசிக்கும் வகையில் விறுவிறுவென இருக்கும்.” இவ்வாறு படத்தின் இயக்குனர் நஞ்சுண்டன் கூறினார்.
இப்படம் கதிர் நடித்த ‘பரியேறும் பெருமாள்’ படம் வெளிவடுவதற்கு முன்பே தயாராகிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. சில பல காரணங்களினால் இப்படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. கதிர் நடித்த ‘பரியேறும் பெருமாள்’ வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த படத்திற்கு ஒரு விமோட்சணம் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். விமோட்சணம் எப்படி என்றால், கதிரின் சமீபத்திய வெற்றியை பார்த்த மைல்ஸ்டோன் மூவிஸ் G.டில்லிபாபு, இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார் என்பது தான். இப்படம் மார்ச் 8’ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.