90ML – திரை விமர்சனம் இதோ..!

ஓவியா, மஸூம் ஷங்கர், மோனிஷா ராம், ஸ்ரீ கோபிகா, பொம்மு லட்சுமி ஆகியோர் நடித்து. சிம்பு இசையமைத்துள்ள இந்த படத்தை அனிதா உதீப் எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார். ஐந்து பெண்களை மையமாகக் கொண்டது இந்த திரைப்படம். ஒரு அபார்ட்மெண்டில் புதிதாகக் குடியேறும் ஓவியா,அங்குள்ள நான்கு பெண்களுடன்சேர்ந்து ஒரு கேங்உருவாக்குகிறார். திருமணமான மூன்ற பேர், திருமணம் ஆகாத இருவர் என இந்த ஐந்து பேர் சேர்ந்து அடிக்கும் கூத்துக்கள் தான் 90 ML.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க அவர்கள் பார்ட்டி செய்கிறார்கள். படம் முழுக்க குடிக்கிறார்கள் என்று இல்லை.”சரக்கு-லாம் வேணாம், க்ரீன் டீகுடிங்க”-ன்னு ஒரு கட்டத்தில்ஓவியாவே சொல்கிறார். ஒட்டுமொத்தமாக பார்த்தால், விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் பல சீன்களில் காமெடி ட்ராக்கும் கலகலக்க வைக்கிறது. க்ளைமேக்ஸ் வரை தாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் எந்தவித காம்ப்ரமைஸும் இல்லாமல், இயக்குனர் அனிதா படத்தை எடுத்துள்ளது சிறப்பு. வழக்கமான தமிழ் சினிமா போல, டிராக் மாறி, கருத்து சொல்லிவிடுவார்களோ என சந்தேகம் எழும்போது, அதை தவிர்த் து இயல்பாகவே செல்கிறது படம்.

ஒரு பாலின உறவை வைத்து முந்தைய படங்களை போல காமெடி மட்டும் செய்யாமல், கொஞ்சம் வித்தியாசமாக பேசியுள்ளது வரவேற்கத்தக்கது.

முக்கியமாக, கிளைமாக்ஸில் இசையமைப்பாளர் சிம்பு வந்து ஒரு சிறிய ரோல்செய்துள்ளார். படம் முழுக்க தெளிவாக பேசி முடிவெடுக்கும் ஓவியா, சிம்புவை பார்த்தவுடன் லிப்லாக் செய்து கமிட் ஆகிவிடுகிறர்.

90 ML ல் இளசுகளை கவர பல விஷயங்கள் இருந்தாலும், இன்னும் வலு பெற கதையை அமைத்திருக்கலாம். மொத்தத்தில் 90 ML இளசுகளுக்கான ஒரு கூத்து.

Leave a Response