டி.டி.ராஜா தயாரிப்பில் நடிக்கும் விஜய்ஆண்டனி..!

சலீம் படம் தொடங்கி திமிரு புடிச்சவன் வரை தொடர்ந்து சொந்தப்படங்களில் நடித்து வந்த விஜய்ஆண்டனி.
மற்ற தயாரிப்பாளர்களின் படங்களின் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அம்மா க்ரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் படம் நடித்து வரும் விஜய் ஆண்டனி அடுத்து ‘ஆள்’, ‘மெட்ரோ’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில் சசிக்குமார், நிக்கி கல்ராணி நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தை ‘செந்தூர் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் டி.டி.ராஜா தயாரித்து வருகிறார். இது இவரது முதல் தயாரிப்பாகும். இந்நிலையில் டி.டி.ராஜா, தனது இரண்டாவது படமாக விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.

அரசியல் படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது, இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பமாக உள்ளது.

Leave a Response