7 சுரங்களை பற்றி தெரியாதவர்கள் சங்கீத வித்வான்களை பற்றி பேசலாமா? மு.க.ஸ்டாலினை தாக்கும் அமைச்சர் ஜெயகுமார்..!

இன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத, உதவாக்கரை பட்ஜெட் என்றும், சங்கீத வித்வான் பாடுவதை போல சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னார் ஓ.பி.எஸ் என்றும், இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல என்றும் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தும் பட்ஜெட் என்றும் விமர்சனம் செய்தார்.

மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயகுமார், ‘சங்கீத வித்வான்கள் என்றால் கேவலமா? அவர்கள் அனைவரும் ஞானம் பெற்றவர்கள். 7 சுரங்களை பற்றி தெரியாதவர்கள் சங்கீத வித்வான்களை பற்றி பேசலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Response