பேட்டயை நேரடியாக வம்புக்கு இழுக்கிறதா விஸ்வாசம் : ட்ரைலர் பின்னணி..!

‘விஸ்வாசம்’ படத்தின் எடிட்டர் ரூபன் உண்மையிலேயே வித்தைக்காரர் தான். டிரைலரின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பேட்ட படக் குழுவுக்கு ரிப்ளை செய்வது போலவே உருவாக்கி, சிறந்த வியாபார தந்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ரஜினி, அஜித் என இருவருமே மெகா தலைகள் தான். இருவரின் படங்களுக்கும் கூட்டம் அள்ளத் தான் போகிறது. ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக தியேட்டர்கள் நிரம்பி வழியத் தான் போகிறது. படம் இனிமேல் தான் ரிலீசாகப் போகிறது என்றாலும், அவர்களின் பாக்கெட்டுகள் அல்ரெடி நிரம்பியாகிவிட்டது.

ஜனவரி.10ம் தேதியே இரு படங்களும் ரிலீசாவதால், இரு படக்குழுவும் ஆடியன்ஸை முடிந்தவரை தியேட்டரை நோக்கி இழுக்க முயற்சி செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே, பேட்ட டிரைலருக்கு பதிலளிக்கும் வகையிலான டிரைலரை எடிட்டர் ரூபன் உருவாக்கியுள்ளார்.

மரண மாஸ் என ஒரு பிராண்ட்டை பேட்ட படக்குழு பயன்படுத்த, ” ‘கொலமாஸ்’ விஸ்வாசம் டிரைலர் விரைவில்” என எடிட்டர் ரூபன் கொளுத்திப் போட்டார். அதன்படி, இன்று ரிலீசாகி இருக்கும் விஸ்வாசம் டிரைலரில், இடம் பெற்றிருக்கும் பன்ச் வசனங்கள் உண்மையில் அந்த படத்திற்காக தான் எழுதப்பட்டதா, அல்லது பேட்ட டிரைலருக்கு பிறகு அவசர அவசரமாக ஷூட் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டதா? என்றே புரியவில்லை.

பேட்ட டிரைலரில், “அடிச்சு Underwear-ரோட ஓட விட்டுருவேன், மானம் போயிடும் பார்த்துக்க என்று ரஜினி பன்ச் வைக்க, விஸ்வாசத்தில் “உங்க மேல எனக்கு கொல கோவம் வரணும். ஆனா, எனக்கு உங்கள பிடிச்சிருக்கு சார்” என அஜித் ரிப்ளை கொடுக்கிறார்.

அதுமட்டுமல்ல, ‘நம்பர்.1 என்பது எனது அடையாளம் என்று விஸ்வாசம் வில்லன் அஜித்திடம் சொல்ல, (சத்தியமா அந்த நம்பர்.1 ரஜினி இல்லீங்கோ) அஜித்தோ, அதுக்கு நக்கலாக ரிப்ளை கொடுக்கிறார்.

என் கதையில் நான் ஹீரோடா என்று வில்லன் சொல்ல, ‘என் கதையில நான் வில்லன் டா’ என்று அஜித் பதில் அடிக்கிறார்.

பேட்ட, விஸ்வாசம் படத்தின் விநியோகஸ்தர்கள் இடையே அந்தந்த ஏரியாக்களில் உள்ள தியேட்டர்களை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியதை சினிமாக்காரர்கள் அறிவார்கள். அதையும், விஸ்வாசம் எடிட்டர் விட்டு வைக்கவில்லை போல.. “ஏறி மிதிச்சேன்னு வை. ஏரியா வாங்குறதுல்ல. மூச்சு கூட உன்னால வாங்க முடியாது” என தல பன்ச் பேசுகிறார்.

ஆனால், இது எல்லாவற்றுக்கும் மேலாக அல்டிமேட்டாக அஜித் ஒரு ரிப்ளை கொடுக்குறாரு பாருங்க. அங்க தான் நிக்குறார் எடிட்டர் ரூபன். பேட்ட படத்தில், “எவனுக்காவது பொண்டாட்டி, புள்ளைங்கன்னு, சென்டிமென்ட்டு, கின்டிமென்ட்டு இருந்தா அப்டியே ஓடிப் போயிடு. கொல காண்டுல இருக்கேன்.. மவனே கொல்லாம விட மாட்டேன்” என்று ரஜினி மாஸ் பன்ச் வைக்க, இங்க தலயோ “பேரு தூக்குதுரை.. தேனி மாவட்டம். ஊரு கொடுவிலார்பட்டி. பொண்டாட்டி பேரு நிரஞ்சனா. பொண்ணு பேரு ஸ்வேதா. ஒத்தைக்கு ஒத்தை வாடா” என்று பின்கோடை மட்டும் மிச்சம் வைத்து முழு அட்ரசையும் கொடுத்து மீசையை முறுக்குகிறார் தல.

Leave a Response