தல, தளபதி ரசிகர்களுக்கு நடிகர் ஆரி வேண்டுகோள்..!

நடிகர் ஆரி ரெட்ட சுழி படத்தின் மூலம் அறிமுகமாகி. பின்னர் நெடுஞ்சாலை மற்றும் மாயா படத்தின் மூலம் பிரபலமானவர். இவரது நடிப்பில் வந்த அனைத்து படங்களும் வித்தியாசமான கதாபாத்திரத்தை கொண்டுள்ளன. நடிகர் ஆரி தனது உருக்கமான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் கஜா புயலால் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் ஆரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என கூறியுள்ளார். சென்னையில் பாதிக்கப்பட்டபோது அனைத்து மக்களும் உதவி செய்தனர்.

அதேபோல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவி செய்யுமாறு கூறியுள்ளார். அந்த வீடியோவில் சர்கார் படத்தால் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தியவாறு. இப்போது அனைவரும் ஒன்று சேர்ந்து உதவி செய்யுமாறு கூறியுள்ளார். தல, தளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்து அப்பகுதி மக்களுக்கு உதவுமாறு கூறியுள்ளார்.

Leave a Response