‘பில்லா பாண்டி’ படத்தில் தல அஜித் புகழ்பாடும் ஒரு பாடல்- ஆர்.கே.சுரேஷ் புகழாரம்!

billa

ஆர்.கே.சுரேஷ் நடித்து வரும் ‘பில்லா பாண்டி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தில் தல அஜித் புகழ்பாடும் ஒரு பாடல் உள்ளதாம். எங்க குல தங்கம், எங்க தல சிங்கம்’ என்று தொடங்கும் இந்த பாடலுக்கு ஆர்.கே.சுரேஷ் ஏராளமான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுடன் நடனம் ஆடுகிறார். கல்யான் மாஸ்டர் நடனம் அமைக்கும் இந்த பாடலுக்காக சுமார் 300 அஜித் பேனர்கள், கட் அவுட்டுக்கள் தயாராகியுள்ளது. இந்த பாடலின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

thala

ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சரவணஷக்தி இயக்கி வருகிறார். இளையவன் இசையில் ஜீவன் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

Leave a Response