சின்மயி விவகாரத்தில் மட்டும் திமுக தலைவர் ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன் – தமிழிசை கேள்வி..!

சின்ன விஷயத்திற்கெல்லாம் ட்வீட் செய்யும் திமுக தலைவர் ஸ்டாலின், சின்மயி விவகாரத்தில் மட்டும் ஏன் வாய் மூடி இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்வீட்டரில் மீடூ மூவ்மெண்ட் மூலம் கவிஞர் வைரமுத்து உள்பட பாடகர், இசைக்கலைஞர், இயக்குனர் என பலர் மீது பாலியல் துன்புறுத்தல் குறித்து சின்மயி புகார் தெரிவித்து வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழிசையிடம் சின்மயி மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர் கூறும்போது, “பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் சின்ன சின்ன விஷயத்திற்கும் ட்வீட் செய்யும் முக ஸ்டாலின் சின்மயி விவகாரத்தில் வாய் மூடி இருப்பது ஏன்? தங்களுக்கு வேண்டியவர்கள் என்பதால்தானா?

ஆர்.எஸ்.எஸ் என்பது இந்து மத உணர்வுகளை பாதுகாக்கத்தான். ஆனால் இன்றைய காலத்தில் பெண்களே முன் வந்து அந்த உரிமை வேண்டாம் என்று கூறும் போது அதனை ஏற்று கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு சேலத்தில் இதே கருத்தை வலியுறுத்தி பேசிய தமிழிசை, சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு விசாரிக்கபட வேண்டியது என்றார். மேலும் எஸ்.வி.சேகர் முகநூல் பதிவை கண்டித்த அரசியல் கட்சிகள், வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியதுடன், வைகோ உள்ளிட்டோர் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து வாயே திறப்பதில்லை என்றும் பகிரங்கமாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response