மரண மாஸ் காட்டும் சிம்புவின் பெரியார் குத்து ஆல்பம் பாடல்..!

சிம்புவின் குரலில் மரண மாஸாக பெரியார் குத்து என்ற ஆல்பம் பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர் சிம்பு. நடிகர் என்பதை தாண்டி பாடகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமைகளுடன் வலம் வருபவர்.

அதுமட்டுமில்லாமல் சமூக பிரச்சனைகளுக்கான தொடர்ந்து குரல் கொடுத்ததும் அப்பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒரு சில ஐடியாக்களையும் கொடுத்து வருகிறார்.

தற்போது அப்படி தான் மதன் கார்க்கி அவர்களின் வரிகளில் பெரியார் குத்து என்ற ஆல்பம் பாடலை பாடியுள்ளார். மேலும் இப்பாடலுக்கு செம் மாஸாக நடனமும் ஆடியுள்ளார்.

இந்த பாடலின் மூலம் சாதியை வைத்து அரசியல் செய்பவர்களை கடுமையாக சாடியுள்ளார். இதனால் இந்த ஆல்பத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

Leave a Response