நாயகிக்கு லிப்ட்டில் கிடைத்த வாழ்க்கை!

0147

அழகை தேடித் பிடிப்பதும் ஒரு கலைதான். அந்த கலையில் கை தேர்ந்தவர் ராம் கோபால் வர்மா என்றால் மிகை ஆகாது. அவரது நாயகிகள் தூணிலும் இருப்பர். துரும்பிலும் இருப்பர். இப்போது லிப்டிலும் இருந்து தோன்றிய ஒரு தேவதையை பற்றிய சேதி இது.

அந்த கதையை  அந்த அழகு தேவதை அனைகா கூற கேட்போம்.’ இந்தியாவில் பிறந்தாலும் ஹாங்காங்-ல்  ஒரு பிரபல கட்டிட கலை  அதிபரின் ஒரே மகளான நான் இந்தியாவுக்கு வந்திருந்த போது  என் தோழியுடன் மும்பையிலுள்ள ஒரு உயர்ந்த கட்டிடத்தின் லிப்டில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவை  சந்திக்க நேர்ந்தது. என் தோழி அவர் தான் RGV  என அறிமுகப்படுத்தியபோது கூட எனக்கு அவரை தெரியவில்லை.

பின்னர் என் தோழி மூலம் அவர்  படத்தில் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்றதும் முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டேன். அந்த முடிவுக்கு அவரது கதையும் அவருடைய MAKING  ஸ்டைலும் முக்கிய காரணம். லிப்ட் பயணம் என்னை இவ்வளவு தூரம் தூக்கி செல்லும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

அவர் இயக்கத்தில் அறிமுகமாகும் பாக்கியம் எனக்கு கிட்டியது  என்னால்  நம்பவே முடியவில்லை. ‘இரு மொழிகளில் தயாராகும்’ நான்தாண்டா’ திரைப்படம் என்னை நிச்சயம் பிரபலமாக்கும் என்கிறார் அனைகா. அவரது பெயரின் அர்த்தம் கேட்ட போது ‘பலம் வாய்ந்தவள், நிறைவானவள்’ என்று கூறினார்.