காதல் என்ற தமிழ் வார்த்தைக்கு மிக பெரிய பலம் என்றும் கவிஞர்கள் கூறியுள்ளனர் அதை நம் தமிழ் சினிமா பல முறையில் வெளிபடுத்தியுள்ளது. அதில் வெற்றியும் கண்டுள்ளது அப்படியான ஒரு காதல் கவிதை தான் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வந்து இருக்கும் காதல் காவியம் தான் ” 96″ திரைப்படம் என்று சொன்னால் மிகையாகது.
கண்ணீராலும் பார்வையுளும் மௌனதாலும் இந்த காதல் கவிதையை தீட்டியுள்ளார் இயக்குனர் பிரேம்குமார் மழைக்காக பள்ளிக்கூடத்தில் ஒதுங்காதவர்களை கூட ஒட்ட ஒட்ட நனைத்துவிட்டுப் போகும் இந்த 96. பள்ளிகூட காதல் என்றாலே பல படங்களின் ஆபாசம் அருவருப்புதான்பார்த்து இருக்கிறோம் ஆனால் இந்த படத்தில் நம் வாழ்கையை பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் பிரேம் ஒவ்வொரு மனிதனும் இந்த படத்தின் கதையில் பாதிக்க பட்டவராக தான் இருக்க முடியும் நம் கடந்து வந்த அழகிய பள்ளிபருவத்தை கவிதை போல கொடுத்து இருக்கிறார்.இயக்குனர் பிரேம்
விஜய் சேதுபதி, த்ரிஷா ,தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், சிறுவயது விஜய் சேதுபதியாக ஆதித்தியன், பாஸ்கர், சிறு வயது த்ரிஷாவாக கௌரி ஜி.கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் சண்முகசுந்தரம் ஒளி ஓவியத்தில் கோவிந்த வசந்தா இசையில் மழையில் பிரேம்குமார் இயக்கம் என்னும் காவியத்தில் 96 திரைப்படம்
போட்டோகிராபி’ சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் விஜய் சேதுபதி தன் ஸ்டூடன்சுகளுடன் தஞ்சாவூருக்கு வருகிறார். தான் படித்த பள்ளியை பார்க்க விரும்பும் அவர் உள்ளே போய் ஒவ்வொரு இடமாக பார்த்து உணர்ச்சிவசப்படும் போதே, தன் பழைய நண்பர்களுக்கு போன் அடித்துவிடுகிறார். அப்பறமென்ன… 96 பேட்ச்-ல் படித்த அத்தனை நண்பர்களும் ஒரு நாள் சென்னையில் கூடுவதற்கு ஏற்பாடு நடக்கிறது. அந்த நாள்…? அதுதான் இந்தப்படத்தின் மொத்த அழகும்! எந்த புண்ணியவதி இந்தப்படத்தின் இன்ஸ்பிரேஷனோ… எல்லா புகழும் உனக்கே தாயி!
நாற்பது வயசுக்கு மேல் அவ்ளோ பெரிய வெயிட்டில் ஒரு ஆம்பளப் பையன் வெட்கப்படுவதை திரைக்குள் கொண்டு வந்தால், ‘அடச்சே ஏன்யா உனக்கு இந்த வேல?’ என்பான் ரசிகன். ஆனால் அதையே விஜய் சேதுபதி செய்தால், ‘நீ என்ன செஞ்சாலும் ரசிக்க தோணுதே, எப்படிய்யா?’ என்பான். 96 ன் தூணே விஜய்சேதுபதியின் அப்பழுக்கில்லாத அழகான நடிப்புதான். (பிரிச்சு மேய்ஞ்சுட்டான் மனுஷன்) இதயம் தடக் தடக்கென அடித்துக் கொள்ள 22 வருஷம் கழித்து தன் தேவதையின் முகம் காண்கிற அந்த கணம்… பீரிட்டு வழிகிறது காதல்.
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று தான் சொல்லணும் அப்பாடி என்ன நடிப்பு உண்மையில் மாகா நடிகன் என்றால் அது விஜய் சேதுபதி எத்தனை நவரசம் நடிப்பில் மற்ற ஜாம்பவான்களுடன் நான் ஒப்பிடவில்லை ஆனால் மிக சிறந்த நடிகன் என்பதை படத்துக்கு படம் நிருபித்து வருகிறார் அதை இந்த படம் மூலம் மேலும் மனதை நெகிழவைக்கிறார்.
த்ரிஷா இப்படி திறமை வாய்ந்த ஒரு நடிகையை இதுவரை ஒரு கவர்ச்சி பொருளாக காண்பித்துள்ளனர் என்பது மிக பெரிய கொடுமை அடேகப்பா ற்றிஷாக்குள் இப்படி ஒரு நடிப்பா என்று வியக்கவைக்கிறார் முதல் முறையாக அழகில் மயங்க வைக்கிறார் நடிப்பில் மனதை நெருடுகிறார்
சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்து இருக்கும் ஆதித்தியன் இயக்குனரின் பலம் முதல் படத்தில் இப்படி ஒரு நடிப்பா என்று வியக்க வைக்கிறார் அப்படியே விஜய் சேதுபதி சின்ன வயது நகல போலவே இருக்கிறார் விஜய் சேதுபதியை போல நடிப்பில் மிரட்டுகிறார்.
த்ரிஷ்வாக நடித்து இருக்கும் கௌரி வாவ் என்று வியக்க வைக்கிறார் அழகிலும் சரி நடிப்பிலும் சரி கவிதை மாதிரி இயக்குனருக்கு பலம் சேர்த்து இருக்கிறார்.
படத்தின் நடித்த அனைவரும் குறிப்பாக சின்ன வயது தேவதர்ஷினி யாக நடித்த பெண் அதே போல தேவதர்ஷினி பகவதி பெருமாள் இவர்கள் படாது மேலும் பலம் என்று தான்சொல்லனும் தேவதர்ஷினி நடிப்பில் ஒரு படி மேலோங்கி நிற்கிறார் அதைவிட அவர் பெண் நடிப்பில் நம்மை பிரமிக்கவைக்கிறார் ஆடுகளம் முருகதாஸ் ஜனகராஜ் எல்லோரும் நடிப்பில் மிரட்டுகிறார்கள்
மேட் பார் ஈச் அதர் என்று சொல்லுவார்கள் அப்படி தான் இந்த படத்தின் ஒளிப்பதிவு இயக்கம் இசை இந்த மூவரின் ஒருங்கிணைப்பு அட்கேப்பா மூவரும் ஒரே தாராசு தட்டில் நிற்கிறார்கள் அப்படி ஒரு ஒருங்கிணைப்பு. யாரை புகழ்வது என்று தெரியவில்லை அப்படி ஒரு அபார திறமை என்ன ஒரு இசை இளையாராஜா தாலாட்டு போலவே இருந்தது ஒளிப்பதிவால் ஒளி ஓவியம தீட்டியுள்ளார் சண்முகசுந்தரம்
மொத்தத்தில் 96 ஆடோகிராப் (காவியம்)