மீண்டும் ஹீரோவாகும் யோகி பாபு..!

தமிழ் சினிமாவிற்கு 2015இல் ‘டார்லிங்’ படத்தின் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்தவர் சாம் ஆண்டன். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் இரண்டாவது நுரையாக ஜிவி பிரகாஷை வைத்து ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தை இயக்கினார். இவர் தற்போது நடிகர் அதர்வாவை வைத்து ‘100’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அதர்வா முதன் முறையாக காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார்.

இதன் பிறகு நடிகர் யோகி பாபுவை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகர்களில் பிஸியான நடிகர்களுள் ஒருவராக யோகி பாபு வளர்ந்து வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நயன்தாராவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக சாம் ஆண்டன் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் செக்யூரிட்டி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பிணைக்கைதிகளாக வைத்துள்ள தனது பயணிகளை காப்பாற்றும் நாயகன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இயக்குனர் சாம் ஆண்டன், தற்போது உருவாக்கி வரும் ‘100’ படத்தினை முடித்த பிறகு, அடுத்த படத்தினை கையில் எடுக்க உள்ளார்.

Leave a Response