திமுக தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும்-மதுரை ஆதீனம்..!

திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பிற்கு பிறகு அவரது மகன் மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், கட்சி தலைமை அவரை கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்தினார் மு.க.அழகிரி. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மதுரை ஆதீனம் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

ரஜினியின் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினி அரசியலுக்கு முழுமையாக வரவில்லை என்றும் எம்.ஜி.ஆர் போன்று எல்லா நடிகர்களாலும் வரமுடியாது என்றும் கூறினார்.

‘சோபியா கைது செய்யப்பட்டிருக்க கூடாது, அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும். தமிழிசை சத்தம் போட்டது இயல்பு தான், அவர் அவரின் கடமையை செய்திருக்கிறார்’ என்றும் மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

Leave a Response