கடந்த 2003-ம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் சாமி.
இந்நிலையில், சாமி திரைப்படத்தின் 2-ம் பாகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் தயாராகி வெளியாக உள்ளது. இப்படத்தையும் இயக்குனர் ஹரிதான் இயக்கியுள்ளார். இப்படத்தில், விக்ரம், பிரபு, பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனிடையே,ஜூன் மாதம் இதன் டிரைலர் வெளியானது.
அதில், விக்ரம், நா சாமி இல்ல பூதம்… தாய்க்கு மகனா பெறக்கல, பேய்க்கு மகனா பொறந்தேன் உள்ளிட்ட பஞ்ச் வசனங்கள் பட்டைய கிளப்பின.
தற்போது சாமி ஸ்கொயர் அடுத்த டிரைலர் இன்று வெளியாக இருக்கிறது.