கருணாநிதிக்கு பெரிய சிலை நிறுவப்படும், மீண்டும் தொண்டர்களை சந்திப்பேன்-அழகிரி..!

மதுரையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு பெரிய சிலை நிறுவப்படும் என்று மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பேரணி நடந்தினார்கள். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி வரை பேரணி நடந்தது.

ஆனால் இந்த பேரணியில் அழகிரி தரப்பு எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை. மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான மக்களே இதில் கலந்து கொண்டு இருந்தனர்.

இதற்காக கடந்த ஒரு வாரமாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார் அழகிரி. ஆனால் பேரணிக்கு பின் முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.இதனால் அவரது தொண்டர்கள் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில்தான் அழகிரி மதுரையில் பேட்டி அளித்துள்ளார். அதில், விரைவில் தொண்டர்களை சந்தித்து பேசுவேன். இப்போதுதான் பேரணி முடிந்து இருக்கிறது. இந்த பேரணி குறித்து என் ஆதரவாளர்களிடம் ஆலோசனை செய்ய இருக்கிறேன். அதவாது மீண்டும் ஆதவாளர்களிடம் பேசும் திட்டத்தில் இருப்பதாக அழகிரி கூறியுள்ளார்.

தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் சிலை வைக்க முடிவு செய்துள்ளேன். மதுரை பால்பண்ணையில் சிலை வைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அரசிடமும் அனுமதி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

வெண்கலத்தில் சிலை வைக்கப்படும். ஆனால் சிலையின் உயரம் தோற்றம் எப்படி இருக்கும் என்று முடிவு செய்யவில்லை. மிகவும் பெரிய அளவில் தத்துரூபமாக சிலை செய்யப்பட்டும் என்றுள்ளார்.

Leave a Response