கைதுக்கு கேரள பாஜகதான் காரணம் : நாம் தமிழர் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..!

கேரளாவில் வெள்ள பாதிப்புகள் நிவாரண பொருட்கள் வழங்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளாவிற்கு இன்று காலை சென்றுள்ளார். வாகனம் நிறைய பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் கோட்டயத்தில் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டயம் போலீசார் அவரிடம் 2 மணி நேரம் விசாரித்தனர்.ஆனால் 2 மணி நேரத்தில் போலீஸ் விசாரணைக்கு பின் சீமான் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு, அம்மாநில பாஜக நிர்வாகிகள்தான் காரணம் என்று நாம் தமிழர் நிர்வாகிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அதில், நாங்கள் சென்ற வாகனத்தை கேரளா பாஜக நிர்வாகிகள் மறித்தனர். எங்கள் வாகனத்தில் விடுதலை புலிகளின் கொடி, பிரபாகரனின் புகைப்படம் இருந்தது. இதை பார்த்து அவர்கள் பிரச்சனை செய்தனர். போலீசையும் அழைத்தனர்.

எங்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறி விசாரிக்க சொன்னார்கள். இதனால்தான் போலீஸ் எங்களை கைது செய்தது. சீமான் கைதுக்கு, கேரளா பாஜகதான் காரணம் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Leave a Response