கட்சியினர், குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

எந்த நேரமும் மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வருமோ என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இந்த ஆலோசனையை தொடர்ந்து ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்திக்க சென்றார்.

கருணாநிதிக்கு 24 மணி நேரம் கொடுக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு மருத்துவமனைக்கு ஸ்டாலின் வருகை தந்தார். அவர் வந்ததும், சிறிது நேரத்திலேயே கட்சியின் மூத்த தலைவர்களும், முக்கிய தலைவர்களும் வரத் தொடங்கினர்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையின் 4-வது தளத்தில் ஸ்டாலின் ஒரு அவசர ஆலோசனை நடத்தினார். குடும்ப உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் கருணாநிதி உடல்நலம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சி தொண்டர்கள் ஏராளமாக குவியத் தொடங்கிவிட்டதால், அது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுப்பது எனவும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.

மேலும் கருணாநிதிக்கு நேற்று மதியம் முதல் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு, அது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 1 மணியிலிருந்து 1.30 மணிக்குள் வீட்டுக்கு செல்லும் ஸ்டாலின், இந்த அவசர ஆலோசனை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் செல்லமுடியவில்லை என்பதால், 2.15 மணிக்கு மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு முதல்வரை சந்திக்க சென்றார்.

Leave a Response