உதயநிதியின் “கண்ணே கலைமானே” இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்..!

திரைப்படங்கள் கவிதையாக உருவாவது முற்றிலும் அரிதான ஒரு சூழல். அத்தகைய படைப்புகள் ஒவ்வொரு சினிமா துறையிலும் இருக்கும், அவை அவர்களுக்கு பெருமையையும் மரியாதையையும் கொண்டுவரும். சந்தேகமே இல்லாமல், தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி எப்பொழுதும் அந்த தளத்திலேயே உயரிய திறமையோடு இருக்க முயற்சிப்பவர் என்று சொல்லலாம்.
மிகவும் குறிப்பாக, அத்தகைய படைப்புகள் இசை என்னும்  மந்திரத்தால் மிகவும் அழகாக இருக்கின்றன. தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த, மிகச்சிறந்த பாடல்களை தன் முந்தைய படங்களில் நமக்கு பரிசாக அவர் வழங்கியிருப்பதிலேயே இது முற்றிலும் தெளிவாகிறது. குறிப்பிடத்தக்க ஒரு உதாரணமாக சீனு ராமசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்த தர்மதுரையை சொல்லலாம்.
அதே கூட்டணி ‘கண்ணே கலைமானே’ என்ற கவித்துவமான தலைப்பை கொண்ட படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கும் வேளையில், தமிழ் சினிமாவில் இருந்து அந்த படம் ஒருபோதும் மங்காது, எதிர்பார்ப்புகள் மிகப்பெரியவை. ஏன் என்றால், பாடல் வரிகளின் பேரரசர் கவிப்பேரரசு வைரமுத்துவாக இருந்தால். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த கூட்டணியின் காரணிகள், இயற்கையாகவே அனைவரின் எதிர்பார்ப்பையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளன. இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. நல்ல குழுவுடன் இணைந்து மிகச்சிறந்த இசை ஆல்பங்களை வழங்குவதற்காக நன்கு அறியப்பட்ட இந்த நிறுவனம், இசை ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றாது.
தமிழ்நாட்டின் அழகான பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Leave a Response