முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் “சுட்டு பிடிக்க உத்தரவு”.!

தமிழ் சினிமாவில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தை இயக்கி இருந்தவர் ராம் பிரகாஷ் ராயப்பா. இவர் தற்போது மிக பெரிய கூட்டணியுடன் தன்னுடைய அடுத்த படமாக ” சுட்டு பிடிக்க உத்தரவு ” என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் மிஸ்கின், சுசீந்திரன், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் படத்தின் இரு நாயகிகளாக அதுல்யா ரவி மற்றும் மஹிமா ஆகியோர் நடித்து வருகின்றனர். முதல் முறையாக மிஸ்கின் வேறொருவரின் இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் திறமையான இளம் இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் அவர்கள் இந்த படத்தின் மூலம் நடிகராக களமிறங்கியுள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் அவர்களால் ரிலீஸ் செய்யப்பட்டு ட்விட்டரில் ட்ரெண்டானது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்க்கும் போது படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Response