கேரளாவில் பலத்த மழை : நிலச்சரிவில் சிக்கி இதுவரை 45 பேர் பரிதாப பலி..!

கேரளாவில் பெய்துவரும் பலத்த தென்மேற்கு பருவமழையால் கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவ மழை கடந்த ஆண்டைக் காட்டிலும் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் இந்த 6 மாவட்டங்களிலும் பெரிய அளவில் நிலச்சரிவும் வெள்ளசேதமும் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள், கட்டிடங்கள் இடிந்தன. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக ஏராளமான பயிர் நிலங்களும் சேதமடைந்துள்ளன.

இந்த தென்மேற்கு பருவமழைக்கு இதுவரை கேரளாவில் வீடுகள் இடிந்தும், மின்சாரம் தாக்கியும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உள்பட 10-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

Leave a Response