சு.சுவாமி அழைப்பை ஏற்று டெல்லி வருகிறார் ராஜபக்சே..!

பாரதிய ஜனதா கட்சி எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அழைப்பை ஏற்று இலங்கை முன்னாள் அதிபரும் போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே டெல்லி வருகை தருகிறார்.

ராஜீவ் கொலை வழக்கின் முக்கிய சதிகாரர் இத்தாலியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார் என சுப்பிரமணியன் சுவாமி நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிடுவது பிரபாகரனையா? பொட்டு அம்மானையா? என்கிற பரபரப்பு கிளம்பியது.

இந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு சுப்பிரமணியன் சுவாமி ஒரு ட்வீட்டர் பதிவைப் போட்டிருக்கிறார். அதில், தம்முடைய விராத் ஹிந்துஸ்தான் சங்கம் ஏற்பாட்டில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க தமது அழைப்பை ஏற்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே டெல்லி வருகை தர உள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Response