காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர் நியமனம்:நழுவும் கர்நாடக அரசிற்கு மத்திய அரசு கெடு..!

காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் பெயர்களை ஜூன் 12ம் தேதிக்குள் அறிவிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய அரசின் அரசிதழில், அதிகாரபூர்வமாகவும் வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் சார்பில், மேலாண்மை ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் பிரபாகர் மற்றும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உறுப்பினராக, திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர், செந்தில்குமார் ஆகியோர் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல புதுச்சேரி அரசின் சார்பிலும், கேரள அரசின் சார்பிலும் உறுப்பினர் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. ஆனால் கர்நாடகா மட்டும், உறுப்பினர் பெயரை பரிந்துரைக்காமல், தொடர்ந்து தாமதித்து வருகிறது.

இந்நிலையில், காவிரி நிதிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்களை, வரும் 12ம் தேதிக்குள் நீர்வளத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என கர்நாடக அரசிற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Response