சிறப்பான பராமரிப்பு, சாத்தனூர் அணை: அவார்ட் கொடுத்த முதல்வர்

cm-award
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். 2015-16ஆம் ஆண்டில் சிறப்பாக பராமரிக்கப்பட்டதற்காக சாத்தனூர் அணைக்கு விருது வழங்கப்பட்டது.

அதற்கான விருதை பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளர் சண்முகம், கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ் ஆகியோருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும், செயற்பொறியாளர் கோவிந்தராஜன், உதவி செயற்பொறியாளர் அருணகிரி, உதவிப் பொறியாளர் ரமேஷ் ஆகியோருக்கு தலா ரூ.10,000க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கி முதலமைச்சர் பாராட்டினார்.

மேலும் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் பண்ருட்டி ஆகிய வட்டங்களில் தொடங்கப்படவுள்ள 5 வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அதேபோல் சென்னை பொன்னேரிக்கரை – காஞ்சிபுரம் சாலையில்,4 வழித்தட ரயில்வே மேம்பாலப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். விருதுநகர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள 125 காவலர் குடியிருப்புகள் மற்றும் 3 காவல் நிலையங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Leave a Response