தேர்தல் முடிந்தது:பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது..!

கர்நாடக தேர்தல் காரணமாக கடந்த மூன்று வாரங்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் அறிவித்து வந்தன. கர்நாடகச் சட்டசபை தேர்தலில் பெட்ரோல் டீசல் விலை அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகக் 20 நாட்களாக விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில்,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.61 டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.79 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (14ம் தேதி) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கடந்த 20 நாட்களாக (ஏப்., 24 முதல்) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையில் தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் அதிகரித்து ரூ.77.61காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு23 காசுகள் அதிகரித்து ரூ.69.79 காசுகளாகவும் உள்ளது.

Leave a Response