திரைத்துறைக்கு கைகொடுக்க வந்துள்ள புதிய நிறுவனம்…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தப்படி மார்ச் 1, 2018 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் இருந்து வருகிறது. இந்த வேலை நிருத்ததிர்க்கான முக்கிய காரணம் கியூப் மற்றும் இதர சில டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடர்கள் விதிக்கின்ற கட்டணங்கள். இந்த கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஆரம்பித்த வேலை நிறுத்தம், பின்னர் திரையரங்கு டிக்கட் கட்டணம், தின்பண்டங்கள் கட்டணம் முதலியவையை குறைக்க வேண்டும் என்றும் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டு இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்துய் வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தினால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை, குறிப்பாக அதன் தலைவர் விஷாலை கண்ட மேனிக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் விமர்சித்து வந்தனர். ஆனால் அதை பற்றி எதுவும் பொருட்படுத்தாமல், தான் ஆரம்பித்த பணியை முடிக்காமல் விடமாட்டேன் என்று விடாபிடியாக இருந்து வருகிறார். அவருக்கு தோணியாக வ்சங்கத்தின் கவுரவ செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, FEFSI சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் பலர் துணையாக இருந்து வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தம் நேரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கியூப் நிறுவனம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் என பலருடனான பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டு தான் வருகிறது ஆனால் அதற்க்கான முடிவு இன்னும் எட்டப்படாமல் இருக்கிறது என்று தயாரிப்பாளர்கள் அனைவருக்குமான வருத்தம் தான்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ‘AEROX’ என்னும் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடருடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதை போல் தயாரிப்பாளர் சங்கத்தின் சொந்த மாஸ்டரிங் வசதியுடன் DCI 2k, 4k ப்ரஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்க, டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடரான ‘மைக்ரோப்ளக்ஸ்’ நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த முயற்சி திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்ககூடும் என சொல்லப்படுகிறது. இதன்மூலம் தயாரிப்பாளர் சங்கத்தில் இனிமேல் அனைத்து படங்களுக்கும் மாஸ்டரிங் செய்யப்பட்டு அனைத்து தியேட்டர்களுக்கும் நேரடியாக கன்டன்ட் கொடுக்கபடும். தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக மாஸ்டரிங் செய்யப்படுவதினால் மாஸ்டரிங்குக்கான கட்டணம் அறவே குறைய வாய்புகள் அதிகமாக் உள்ளது.

தற்போது நடப்பதை பார்க்கும்போது திரைத்துறையின் வேலை நிறுத்தம் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரக்கூடும் என்று தெரியவருகிறது.

Leave a Response