சிரஞ்சீவியுடன் நடிப்பது பெருமை – அமிதாப்பச்சன்

‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு தெலுங்குத் திரையுலகத்தில் சரித்திர காலப் படங்கள் மீதான ஆர்வம் அதிகமாகியுள்ளது. ‘பீரியட்’ படங்கள் என அழைக்கப்படும் முந்தைய வரலாற்றுப் படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.நாளை வெளியாக உள்ள ‘ரங்கஸ்தலம்’ படம் 80களில் நடக்கும் கதையைக் கொண்ட ஒரு படம். அடுத்து நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘மகாநதி’ படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இன்று ‘என்டிஆர்’ வாழ்க்கை வரலாற்றுப் படம் ஆரம்பமாகியுள்ளது.

சிரஞ்சீவி நடிக்க பெரும் பொருட் செலவில் ‘சை ரா நரசிம்மரெட்டி’ படம் ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வருகிறது. 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ‘உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’. அவருடைய கதாபாத்திரத்தில் தான் சிரஞ்சீவி நடிக்கிறார்.இதில் சிரஞ்சீவியின் குருவாக அமிதாப்பச்சன் நடிக்கிறார். ஏற்கெனவே இந்தப் படம் பற்றி இரு தினங்களுக்கு முன்பு தகவல் தெரிவித்த அமிதாப், நேற்று அவருடைய தோற்றம் பற்றிய புகைப்படத்தை வெளியிட்டார். கூடவே, சிரஞ்சீவியுடன் இணைந்து நடிப்பது பெருமையாக உள்ளது என்றும் கூறியிருக்கிறார்

Leave a Response