ஊட்டியில் கனமழை காரணமாக அணைகள் நிரம்ப துவங்கின !

தென்மேற்கு வங்ககடலில் கடந்த வாரம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வந்தது. ஊட்டி, குன்னூர், மஞ்சூர் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் குடிநீர் ஆதாரங்கள் நிரம்பி வருகிறது. மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகள் உள்ளிட்டவைகள் நிரம்ப துவங்கின.

வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்பட கூடிய அபாயமும் நீங்கியது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக மழை பெய்யாத நிலையில் நேற்று மாலை காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கனமழை பெய்ய துவங்கியது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இந்த திடீர் மழை சில மணி நேரம் நீடித்தது.

Leave a Response