ஏர்செல், ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் சேவையும் முடங்கின !..

voda
ஏர்செல், ஏர்டெல்லை தொடர்ந்து சென்னையில் இன்று வோடஃபோன் சேவையும் முடங்கி உள்ளது.

சென்னையில் நேற்று ஏர்டெல் சேவை ஆங்காங்கே பாதிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பலர் ஏர்டெல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறகு சிறிது நேரத்தில் பிரச்னை சரி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சென்னை, கடலூரில் பல பகுதிகளில் வோடஃபோன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது ஹோம்லோகேஷன் ரிஜிஸ்டர் தொடர்பான பிரச்னை என தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வோடஃபோன் தனது டுவிட்டர் பக்கத்தில், இது தற்காலிக பிரச்னை தான். கோளாறை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் சேவை சீரடையும் என விளக்கம் அளித்துள்ளது.

Leave a Response