சிறுமிகளை பலாத்காரம் செய்தால் “தூக்கு தண்டனை”அதிரடிச் சட்டம்..!

images_1517817513248_rape

 

12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா ஹரியாணா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கெனவே, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்கள் சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை என்ற மசோதாவை நிறைவேற்றியுள்ள நிலையில், 3-வது மாநிலமாக ஹரியாணாவும் இணைந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இங்கு சட்டப்பேரவைக் கூட்டத்தின் கடைசிநாள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் சர்மா , கிரிமினல் சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார்.

இதன்படி, பிரிவு 376-ஏ படி 12 வயது, அதற்கு கீழ் உள்ள வயதைச் சேர்ந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிப்பது அல்லது கடும் சிறைதண்டனை அல்லது 14 ஆண்டுகள் அல்லது ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

மேலும், கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் அனைவரும் பாலியல் பலாத்காரக் குற்றம் செய்ததாகக் கருதப்பட்டு அவர்களுக்கும் இதே தண்டனை அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மசோதாவுக்கு ஆளும் கட்சி தவிர்த்து காங்கிரஸ், ஐஎன்எல்டி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம் சிறுமிகள் மட்டுமல்லாமது, அனைத்து வயதைச் சேர்ந்த பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கும் இதேபோன்ற தண்டனை கிடைக்க வழிசெய்யுமாறு திருத்தம் கொண்டுவர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆலோசனை கூறினார்கள்.

மேலும், ஐபிசி 354 பிரிவின்படி, பெண்கள் மீது பாலியல் ரீதியான தாக்குதல், பலாத்காரம் செய்தால், அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறையும், அதிகபட்சமாக 7ஆண்டுகள் வரையிலும் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் இருந்து வருகிறது. அதைக்காட்டிலும் இந்தச் சட்டம் கடுமையாகக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மனோகர்லால் கட்டார் பேசுகையில், ”மாநிலத்தில் சமீபத்தில் நடந்த பாலியல் சம்பவங்கள் மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றன. பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று பல்வேறு காலகட்டங்களில் நான் வலியுறுத்தி இருக்கிறேன். இந்த அவையில் சில உறுப்பினர்கள் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த சட்டத்தின் நோக்கமே பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான்” என்று தெரிவித்தார்.

rape2

Leave a Response