40 சதவீதம் படப்பிடிப்பு நிறைவு பெற்ற தனுஷின் “மாரி 2 ” !

maari
பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், டொவினோ தாமஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாரி 2’.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் நடந்து வருகிறது. அதற்குள் படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகளை முடித்துவிட்டதாக படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார். இன்று முதல் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதால் ஸ்டிரைக் முடிந்த பின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனக் கூறியுள்ளார்.

‘மாரி 2’ படத்திற்கு முன்பாக தனுஷ் நடித்துள்ள ‘வட சென்னை’ படம் வெளிவரலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ், யுவன் கூட்டணி இணைந்துள்ள இந்தப் படத்தில் முதல் முறையாக தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி, கிருஷ்ணா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்காக யுவன் இசையில் இளையராஜாவும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாரி’ படத்தின் முதல் பாகம் 2015ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. அது போலவே இரண்டாம் பாகத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.

Leave a Response