‘விசுவாசம்’ படம் பாடல்களால் குஷியாகிய தல அஜித் …

ajith

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருந்தது. ஆனால் திரைத்துறையினரின் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘விசுவாசம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்காக இரண்டு பாடல்கள் வேண்டும் என்று இயக்குனர் சிவா, டி.இமானிடம் கேட்டிருந்ததாராம். தற்போது அந்த இரண்டு பாடல்களையும் இமான் கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம்.

இமான் தற்போது இசையமைத்த பாடல்களில் ஒன்று அஜித்தின் இன்ட்ரோ பாடல் மற்றொன்று டூயட் பாடலாம். முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைப்பதால் அவர் கூடுதல் உழைப்புடன் இசையமைத்து வருகிறாராம்.

‘விசுவாசம்’ படத்தில் அஜித்திற்கான தீம் மியூசிக்கையும் முடித்துவிட்டாராம். இமானின் பாடல்களைக் கேட்ட சிவா, அதை அஜித்தையும் கேட்க வைக்க, செம ஹேப்பியாகி விட்டாராம் அஜித்.

Leave a Response