நேரம் – விமர்சனம்!!

புதுமுகங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில், புதுவிதமான கான்செப்டில் படங்கள் கொடுத்து ஹிட் செய்வது தான் இப்போதைய டிரெண்ட். இந்த டிரெண்டில் லேட்டஸ்ட் ஆக சேர்ந்திருப்பது நேரம். அதுவும் ஒரு பெரிய பேனரில் ரிலீஸ் ஆனால்..டபுள் தமாகா தான். நல்ல ரீச், நல்ல வசூல், அங்கீகாரம் என அனைத்தும் ஒரே படத்தில் கிடைக்கின்றன.

நல்ல நேரம் வந்தால் ஆண்டியும் அரசனாவான், கெட்ட நேரம் வந்தால் அரசனும் ஆண்டியாவான் என்ற ஒரு வரியை மிகவும்  ஜாலியாக இரண்டு மணி நேரபடமாக கொடுத்தால் எப்படியிருக்கும். அதுதான் நேரம். அதிலேயே காதல், காமெடி, சண்டை என அனைத்தையும் கலந்து கொடுத்துள்ளார். கெட்ட நேரத்தில் ஆரம்பிக்கும் படம் எவ்வாறு தானாகவே நல்ல நேரமாக மாறி சுபமாக முடிகிறது என்பதை இரண்டு மணி நேர படத்தில் அழகாக சொல்லியுள்ளார் இயக்குனர் அல்போன்ஸ்.

சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் ஹீரோவுக்கு வேலை போகிறது. இந்த நேரத்தில் அவன் காதலிக்கும் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. தங்கை கல்யாணத்திற்கு வாங்கும் கடனுக்கு நாயகன், அந்த பணத்திற்கு வட்டி கட்ட படும் கஷ்டம், அந்த நேரத்தில் அவனுக்கு ஏற்படும் சிரமங்கள், அந்த சிரமங்களை மீறி அவன் எவ்வாறு மீண்டு வந்தான், காதலியை கரம் பிடித்தானா? பிரச்சினைகள் ஓய்ந்து நல்ல நேரம் வந்ததா? என்பதே மீதி கதை.

ஹீரோ நிவின். மலையாள முகவெட்டு. சாக்லேட் பாய் கேரக்டருக்கு பொருத்தம். முதல் பாதியில் சிரித்து கொண்டே இருக்கும் ஹீரோ, இரண்டாம் பாதியில் சிரிக்க நேரமே இல்லாமல் ஓடி ஆடுகிறார்.

நாயகியாக நஸ்ரியா நசீம். முதல் பட ரிலீஸ்க்கு முன்பே மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மிகவும் அழகான நாயகி.பொருத்தமான வேடம், ஆனால் கேரக்டர் தான் லிமிடட்.

சிம்ஹா முதல் முறையாக மெயின் வில்லன் கேரக்டர். அசத்தலான நடிப்பு. இரண்டாவது பாதியில் கொஞ்ச நேரமே வந்தாலும் நாசர் ஆவ்சம்.ஆவ்சம்.. தம்பி ராமையாவின் காமெடியில் தியேட்டர் கலகலக்கிறது. ஜான் விஜயின் போலீஸ் ஸ்டேஷன் காமெடி ரசிக்க வைக்கிறது. ரமேஷ், கிரேன் மனோகர், சார்லி ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர்.

கேமரா இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். இசை படத்திற்கு பக்க பலம். சோமாரி பாடல் தாளம் போட வைக்கிறது. காதல் என்னுள்ளே சுகமான மெலடி.

இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில், நகரத்துக்குள்ளேயே படம் பிடித்து ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குனர். முதல் பாதி கொஞ்சம் ஸ்லோ. இரண்டாவது பாதி வேகம் பிடிக்கிறது. முடிவு சுபம்.