நய்யாண்டி – விமர்சனம்!!

naiyaandi-release-date01

அம்பிகாபதி, மரியான் என பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கிய தனுஷ் ஒரு மாறுதலுக்காகவும், ரசிகர்களுக்காகவும் காமெடி கலந்த ஒரு பொழுதுபோக்கு படத்தில் நடிக்க முடிவெடுத்து நடித்துள்ள படம் நய்யாண்டி. தேசிய விருது பெற்ற நடிகர் மற்றும் தேசிய விருது பெற்ற படத்தின் இயக்குனர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து ஒரு பொழுதுபோக்கு படம் கொடுக்கும் பட்சத்தில் அதன் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இந்த நய்யாண்டி.??

தான் படித்த பூவாளி கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்கு போகிறார் தனுஷ். அதே திருவிழாவுக்கு தன்னுடைய பாட்டி வீட்டுக்கு வருகிறார் நஸ்ரியா. பரோட்டா சூரி, சதீஷ், கும்கி அஷ்வின் ஆகியோர் சேர்ந்து தனுஷ் நஸ்ரியாவை கவர பல முயற்சிகள் செய்கிறார்கள். எல்லா முயற்சிகளும் சொதப்ப, பின்னர் ஒரு சின்ன விஷயம் நஸ்ரியாவை தனுஷ் மீது காதல் வயப்பட வைக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணமும் செய்து கொள்கிறார்கள். அதுவும் இடைவேளையிலேயே! அப்போ மீதி படம்??? அது தான் சஸ்பென்சான மீதி கலகல காமெடி.

கும்பகோணத்தில் குத்துவிளக்கு செய்யும் பிரமீட் நடராஜனுக்கு மூன்று மகன்கள். இளைய மகன் தனுஷ்-க்கு வயசு 24. 42 வயசு அண்ணனாக நடிகர் ஸ்ரீமன். 40 வயது அண்ணனாக சத்யன். இப்படி 40 வயசுக்கு மேல ஆகியும் திருமணமாகாமல் அண்ணன்கள் இருக்கும் நம் வீட்டில் எப்படி தன்னுடைய திருமணத்தை சொல்லுவது என்று தனுஷ் எடுக்கும் முடிவுதான் பாதி படம். காமெடிக்கு இந்த பாதி உத்திரவாதம்.

இந்த படத்தில் நடிப்புக்கு கிரெடிட் கொடுக்கவேண்டிய அவையம் இல்லை. ஆக படத்தை பத்தி மட்டும் சொல்லிவிடலாம். மொத்த இரண்டரை மணி நேர படத்தில் தனுஷ் அண்ணன்கள் வரும் இரண்டாவது பாதி ரசிக்க வைக்கிறது. ஆனால் முதல் பாதி எங்கே போகுதோ படம்? என்று கேட்க வைக்கிறது. பாடல்களை எடுக்க வெளிநாடுகளுக்கு பரந்துள்ளர்கள் படக்குழுவினர். பாரீன் தேவியே இல்லை என்ற குரல்கள் ஆங்காங்கே கேட்கிறது. எதுக்கு இந்த பாட்டுக்கெல்லாம் பாரீன் போனாங்கன்னு தெரியல. வாகை சூடவா மாதிரி அழகா இங்கயே பண்ணிருக்கலாம். மேலும் எக்கச்சக்க பாடல்கள். ஓ மை காட்.

நஸ்ரியாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. படத்துல முக்கியத்துவமும் இருக்கு. கவர்ச்சி காட்டாத நடிகைகள் பட்டியலில் கண்டிப்பாக இவருக்கும் இடமுண்டு.

சின்னவண்டு என்ற கேரக்டரில் தனுஷ். வேங்கை படத்தை போலவே இந்த படத்திலும் மரத்துக்கு மரம் தாவுகிறார், கிணத்த தாண்டுகிறார். நடிப்பதற்கு தேவையான கதை இல்லாத படம். சும்மா அப்படியே பொழுதுபோக்குக்கு வந்துபோவது போல் தெரிகிறது.

மொத்த படமும் பார்க்கையில் ஆங்காங்கே சில, சில இடங்கள் மட்டுமே நன்றாக இருக்கிறது. மற்றவை ம்ஹிம்..