ஆரஞ்சு நிறத்தில் பாஸ்போர்ட் மற்றும் கடைசி பக்கம் நீக்கம்: கைவிட்டது மத்திய அரசு

orange-pp

குடியுறவு சோதனை (ECR) தேவை என்ற நிலையில் உள்ள பாஸ்போர்ட்களை ஆரஞ்சு நிரத்தில் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்பட்டது. வெளியுறவு அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களை பாகுபாடு பார்த்து பிரிக்கும் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் தரவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது, இதனால் விமான நிலைய சோதனையின் போது பாஸ்போர்ட்டில் உள்ள மேக்னடிக் ரீடரை ஸ்கேன் செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும். எனவே, குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை வெளியுறவுத்துறை நீக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், பாஸ்போர்ட் கடைசி பக்கம் நீக்கம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பாஸ்போர்ட் ஆகிய முடிவுகளை கைவிட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையே தொடரும் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Response