கெஞ்சும் இசையமைப்பாளர் .

gv-prakash-

தமிழகத்தில் அண்மையில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது. 108 சதவீத அளவுக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் தங்களின் மாதாந்திர சம்பளத்தில் 25 சதவீதத்தை அரசு பேருந்து கட்டணத்துக்கு செலவிடும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கெனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை , ஜிஎஸ்டி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவற்றால் கடும் இன்னலுக்கு ஆளாகிவரும் பொதுமக்கள், தற்போது இந்த பேருந்து கட்டண உயர்வால் மேலும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக் கோரி ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். அதில் விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கமுடியாத பேருந்து கட்டண உயர்வு சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response